அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்குமாறு அரச தரப்பிலிருந் தமக்கு எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார் தெரிவித்தார்.
புதிய அமைச்சரவை பொறுப்பேற்கவிருக்கும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினரான அரவிந்குமாருக்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த விடயம் தொடர்பில், அரவிந்த்குமாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்தத் தகவல்களில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்று குறிப்பிட்டார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியாக, ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான அரவிந்தகுமார் எம்.பி., அரசமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து அரசுக்கு நேசக்கரம் நீட்டினார்.
இதனால் தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் மலையக மக்கள் முன்னணியில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.