200 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து – ஒருவர் பலி – இருவர் காயம்!

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஓயா , டெஸ்போட் மேற்பிரிவு காட்டுப்பகுதியில் இருந்து மரங்களை ஏற்றிச்சென்ற லொறியொன்று வீதியை விட்டு விலகி, சுமார் 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். இருவரும் காயம் அடைந்துள்ளனர்.

நானுஓயா நகருக்கு செல்வதற்காக குறித்த லொறியில் பயணித்த 58 வயதுடைய நானுஓயா , டெஸ்போட் தோட்டம் – வாழைமலை பிரதேசத்தைச் சேர்ந்த வடமலை மயில்வாகனம் என்பவரே இவ்வாறு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான லொறியின் சாரதி ஆபத்தான நிலையிலும் , உதவியாளர் சிறு காயங்களுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இயந்திர கோளாறு காரணமாக லொறி வீதியில் இருந்து விலகி, விபத்துக்குள்ளாகி உள்ளதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நானுஓயா நிருபர்

Related Articles

Latest Articles