கட்டாரில், 2014 ஆம் ஆண்டு முதல் பணியாற்றிய 343 இலங்கைப் பணியாளர்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இயற்கை மரணம், தற்கொலை, கொலை, வீதி விபத்துக்கள், ஏனைய விபத்துகள், கொவிட்19 இறப்புகள் மற்றும் உறுதிப்படுத்தப்படாதவை என்பன இவற்றுள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, 2014 ஆம் ஆண்டு முதல் 207 இயற்கை மரணங்களும், தற்கொலைகளால் 30 மரணங்களும், வீட்டு வன்முறைகளால் 06 மரணங்களும், வீதி விபத்துக்களால் 50 மரணங்களும், பிற விபத்துக்களால் 35 மரணங்களும், கொவிட்19 தொற்றினால் 14 மரணங்களும் மற்றும் ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணமும் பதிவாகியுள்ளன.இவ்வாண்டில், அக்டோபர் (31) வரை 37 மரணங்கள் பதிவாகின.
அத்துடன், 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் முறையே 11 மற்றும் 03 கொவிட்19 மரணங்களும் பதிவாகியுள்ளன. இந்தத் தகவல்களின் படி 2015 ஆம் ஆண்டிலே அதிக மரணங்கள் பதிவாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இதில் 29 இயற்கை மரணங்களும், 04 தற்கொலைகளும், ஒரு கொலையும், 12 வீதி விபத்துகளும் , 06 பிற காரணிகளாலானவையும் அடங்குகின்றன.
அத்துடன், 13 இயற்கை மரணங்கள், 02 தற்கொலை மரணங்கள், 03 கொலைகள்,இரண்டு விபத்துக்கள், ஒரு உறுதிப்படுத்தப்படாத மரணமென 2020 ஆம் ஆண்டில் குறைவான மரணங்கள் பதிவாகியுள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.