2020 O/L பரீட்சை – பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலயத்தில் சிறந்த பெறுபேறு!

கொத்மலை கல்வி வலயத்துக்குட்பட்ட பூண்டுலோயா தமிழ் மகா வித்தியாலத்தில் இம்முறை வெளியான க.பொ.த.சா.தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் படி மூன்று மாணவர்கள் சகல பாடங்களிலும் 9 ஏ சித்திகளைப் பெற்றுள்ளதாக அதிபர் முருகேசு ஸ்ரீவேனுகோபால் சர்மா தெரிவித்தார்.

மாணவிகளான செல்வகுமார் லக்ஸ்ரீ,இராதாகிருஸ்ணன் யதீஷா,நடராஜ் கிஷானி ஆகியோரே 9 ஏ சித்தி பெற்றவர்களாவர். இதைவிட பரீட்சைக்கு தோற்றிய 112 மாணவர்களுள் 83 மாணவர்கள் உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அதேவேளையில் இப்பாடசாலையில் கத்தோலிக்கம், இஸ்லாம்,வர்த்தகம் மற்றும் விவசாயம் ஆகிய பாடங்களில் 100 வீத சித்தியையும் சமய பாடத்தில் 88 வீத சித்தியையும் தமிழ் பாடத்தில் 88 வீத சித்தியையும் ஆங்கில பாடத்தில் 55 வீத சித்தியையும் புவியியல் பாடத்தில் 94 வீத சித்தியையும் குடியுரிமை பாடத்தில் 80 வீத சித்தியையும் வரலாறு பாடத்தில் 82 வீத சித்தியையும் விஞ்ஞான பாடத்தில் 55 வீத சித்தியையும் சித்திர பாடத்தில் 91 வீத சித்தியையும் கணித பாடத்தில் 76 வீத சித்தியையும் பெற்றுள்ளமை பாடசாலைக்கு கிடைத்த வரலாற்று வெற்றியாகும்.

தொடர்ந்து இப்பாடசாலையில் அதிகூடிய மாணவர்கள் சித்தி பெற்று விஞ்ஞானம், கணிதம்,வர்த்தகம் மற்றும் கலைப்பிரிவுகளுக்கு தெரிவாகின்றனர். ஏனைய விளையாட்டுகள்,தமிழ்தினம் போட்டிகளிலும் சாதனைகளை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles