கடந்த 2020ம் ஆண்டு எந்த திரைப்படங்களும் திரையரங்கில் வெளியாகாமல் இருந்தது. கொரோனா மிகவும் உச்சத்தில் இருந்த வருடம் அது.
இந்த வருடம் கொரோனாவின் தாக்கம் கொஞ்சம் குறையவே திரையரங்குகளில் படங்கள் வெளியிட அரசு அறிவித்தார்கள். அறிவிப்பு வந்த உடனே திரையரங்குகளில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகின.
விஜய்யின் மாஸ்டர் முதல் சமீபத்தில் வெளியான சிம்புவின் மாநாடு வரை அனைத்திற்கும் மக்கள் பெரிய ஆதரவு கொடுத்துள்ளார்கள்.
இந்த படங்கள் எல்லாம் கொரோனா அச்சம் இல்லாத காலகட்டத்தில் வெளியாகி இருந்தால் வசூலில் பெரிய சாதனைகளை செய்திருக்கும்.
சரி இந்த 2021ம் ஆண்டு ஏகப்பட்ட படங்கள் வெளியான நிலையில் அதிகம் வசூலித்து டாப் 5 இடங்களை எந்தெந்த படங்கள் பிடித்துள்ளன என்ற விவரத்தை பார்ப்போம்.
- மாஸ்டர்- ரூ. 250 கோடி
- ‘அண்ணாத்த- ரூ. 150 கோடி
- டாக்டர்- ரூ. 100 கோடி
- மாநாடு- ரூ. 85 கோடி
- கர்ணன்- ரூ. 70 கோடி