2021 ஆம் ஆண்டுக்கான வேலைத்திட்டம்! அறிக்கை கோருகிறார் ரணில்!!

2021 ஆம் ஆண்டுக்காக முன்னெடுக்கப்படவேண்டிய புதிய வேலைத்திட்டங்கள் தொடர்பில் தனக்கு விரிவானதொரு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தனவுக்கு, பணிப்புரை விடுத்துள்ளார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க.

ஐக்கிய தேசியக்கட்சியில் தற்போது மறுசீரமைப்புகள் இடம்பெறவுள்ளன. 2021 ஆம் ஆண்டு தலைமைப்பதவியில் மாற்றம் வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணிலும் இணக்கம் வெளியிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே கட்சிக்கான புதிய வேலைத்திட்டம் குறித்து அவர் அறிக்கை கோரியுள்ளார். புதிய தலைவருக்கான போட்டியில் ருவான் விஜேவர்தன, வஜிர அபேவர்தன ஆகிய இருவரின் பெயரே முன்னிலையில் இருக்கின்றது.

அத்துடன், அரச ஊழியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு வஜிரவிடம், ரணில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Latest Articles