2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு

2022ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இடம்பெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 11ஆம் திகதி நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles