2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உங்கள் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரியாக உள்ளனவா என்பதை தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையத்தளம் ஊடாக சரிபார்த்துக்கொள்ளலாம்.
மூன்று மொழிகளிலும் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலில் தேர்தல் ஆணைக்குழுவின் https://elections.gov.lk என்ற இணையத்தளத்துக்குள் உள்நுழையுவும்.அடுத்ததாக மொழியை தேர்வு செய்யவும்.

தமிழ் மொழியை தெரிவுசெய்தால், ‘எங்களுடைய இணையத்தளம்’, ‘ஈ – சேவைகள்’ என இரு தேர்வுகள் இருக்கும். இதில் ‘ஈ – சேவைகள்’ பகுதியை ‘க்ளீக்’ செய்யவும்.

அதன்பிறகு வரும் பகுதியில் ‘All eServices’ எனும் பகுதியை அணுகவும்.
மூன்று தேர்வுகள் வரும்.

1.Voter Registration Details
2.Electoral Registration Details – Draft 2022
3.On-line Registration

இவற்றில் Electoral Registration Details – Draft 2022 என்பதை ‘க்ளீக்’ செய்யவும்.
அதன் பிறகு வரும் பட்டியலில், உங்கள் தேசிய அடையாள அட்டை, மாவட்டம் என்பவற்றை சரியாக பதிவிடவும். அவ்வாறு பதிவிட்ட பின்னர் உரிய விவரம் காண்பிக்கப்படும்.

இணையத்தள வசதி இல்லாதவர்கள் கிராம அதிகாரியை நாடினால், அவரிடமும் பட்டியல் விவரம் இருக்கும்.
பெயர், விவரம் இல்லாவிட்டால் அது தொடர்பில் கிராம அதிகாரியிடம் வினவி, விளக்கம் பெறலாம். ஜுலை 12 ஆம் திகதிக்குள் மேன்முறையீடுகள் இடம்பெற வேண்டும்.
வாடகை வீட்டில் இருந்தவர்கள் புதிய பகுதிக்கு சென்று பதிவை மேற்கொண்டிருந்தால், ஏற்கனவே நீங்கள் இருந்த கிராம சேவகர் பகுதியில் உங்கள் பெயர் நீங்கப்பட்டுள்ளதா, புதிதாக வாக்காளர்களாக பதிவு செய்தவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
