2020 ஜனவரி முதல் வளர்ப்பு நாய்களுக்கு கட்டாயம் வரி செலுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தும் யோசனையொன்று தம்புள்ளை மாநகரசபையில் முன்வைக்கப்படவுள்ளது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி தம்புள்ளை மாநகர சபை எல்லைக்குள் காணப்படுகின்ற 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு நாய்களுக்கு வரி செலுத்துவது கட்டாயமாக்கப்படும்.
தம்புள்ளை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் இதற்கான யோசனையை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தம்புள்ளை மாநகர சபையின் தவிசாளர் ஜாலிய ஓபாத்தவினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.