2023 இல் அதிகம் அன் இன்ஸ்டால் செய்யப்பட்ட செயலி எது தெரியுமா?

உலகளவில் 480 கோடி பேர் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இது சர்வதேச மக்கள் தொகையில் 59.9 சதவீதமும், ஒட்டுமொத்த இண்டர்நெட் பயனர்கள் எண்ணிக்கையி 92.7 சதவீதம் ஆகும். சமூக வலைதளங்களை பயன்படுத்துவோர் ஒவ்வொரு மாதமும் 6.7 வெவ்வேறு நெட்வொர்க்குகளை பயன்படுத்துகின்றனர்.
தினமும், 2 மணி 24 நிமிடங்கள் வரை சமூக வலைதளங்களில் செலவிடுகின்றனர்.

சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர் இன்ஸ்டாகிராம் தளத்தில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு மட்டும் உலகளவில் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் “இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும்” என்று தொடர்ச்சியாக இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

உலகளவில் ஒரு லட்சம் பேரில் 12 ஆயிரத்து 500 பேர் வரை இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்-ஐ அழிப்பது தொடர்பான இணைய தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

சமூக வலைதள உலகில் முன்னணி தளமாக இன்ஸ்டாகிராம் தொடர்ந்து நீடிக்கிறது. உலகளவில் சுமார் 240 கோடி பேர் இன்ஸ்டாகிராம் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமை தொடர்ந்து ஸ்னாப்சாட் தளத்தை பயன்படுத்துவோரில் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் தங்களது ஸ்னாப்சாட் அக்கவுண்ட்-ஐ எப்படி அழிக்க வேண்டும் என தேடியுள்ளனர்.

ட்விட்டர் 12,300, டெலிகிராம் 71,700, பேஸ்புக் 24,900, யூடியூப் 12,500; வாட்ஸ்அப் 4,950 மற்றும் WeChat 2,090 ஆகும்.

பல ஆண்டுகளாக ஏற்பட்ட வளர்ச்சிகள், விளம்பரங்களின் வருகை மற்றும் பிராண்டுகளை விளம்பரப்படுத்துவதற்கான இடமாகப் பயன்பாடு ஆகியவை பயனர்களின் வரவேற்பை பெறாமல் இருந்திருக்கலாம். இதன் காரணமாக இந்த முடிவு வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Related Articles

Latest Articles