2024 முதல் 2031 வரையான 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்கள் இடம்பெறும் நாடுகள் அறிவிப்பு

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கை மற்றும் இந்தியாவில் இடம்பெறவுள்ளது.

இறுதியாக 2012 ஆம் ஆண்டு இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்றிருந்தது.

இந்நிலையில், 2024 முதல் 2031 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் 8 ஐ.சி.சி கிரிக்கெட் தொடர்களை நடத்தவுள்ள 12 நாடுகளின் விபரங்களை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டு உலகக்கிண்ண இருபதுக்கு கிரிக்கெட் தொடரை அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இணைந்து நடத்தவுள்ளன.

அத்துடன், 2025 ஆம் ஆண்டு உலக சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் இடம்பெறவுள்ளது.

அவ்வாறே, 2026 ஆம் ஆண்டு இருபதுக்கு 20 ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.

2027 ஆம் ஆண்டு ஆடவர் உலக்கிண்ணத் தொடர் தென் ஆபிரிக்கா, சிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளது.

அதேபோல், 2028 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரை அவுஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

அவ்வாறே, 2030 ஆம் ஆண்டு ஆடவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகளில் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, 2029 சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ள அதேவேளை, 2031 ஆம் ஆண்டு ஆடவர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் பங்களாதேஷில் இடம்பெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles