ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய கூட்டமொன்று கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தலைமையில் நடைபெற்றது. கட்சி மாநாடு, கட்சியின் அடுத்தக்கட்ட நகர்வுகள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் இதன்போது அலசி ஆராயப்பட்டுள்ளது.
அப்போது, “ 2024 இல் ஆட்சியைப் பிடிப்போம் என்று நீங்கள் அடிக்கடி கூறிவருகின்றீர்கள். அதற்கான திட்டம் என்ன, இது உண்மையா” – என உறுப்பினர் ஒருவர் வஜிரவிடம் வினா எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த வஜிர அபேவர்தன, “ அம். 2024 இல் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சி அமைக்கும். இதனை தெளிவாக டயரியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். வியூகம் பற்றி இப்போதே கூறமுடியாது.” – என்றாராம்.
அதேவேளை, கடந்தவாரம் ஆளுங்கட்சி கூட்டமொன்றும் நடைபெற்றுள்ளது. இதன்போது அரிசி மற்றும் சீனி மாபியாக்களுக்கு கட்டாயம் முடிவு கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரமே ஜனாதிபதியால் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்ப்டுள்ளன.