2024 ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆட்சியே அமையும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரான பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனத்தில் இன்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
” எமது கட்சிக்கு, நாட்டுக்கு தற்போது ‘ஸ்மார்ட்’ தலைவர் ஒருவர் இருக்கின்றார். அவரை உலகம் ஏற்கின்றது. தூர நோக்கு சிந்தனை அவரிடம் இருக்கின்றது. எனவே, நாட்டில் எல்லா துறைகளும் நவீனமயப்படுத்தப்படும். அந்தவகையில் எமது நாடு ஸ்மார்ட் நாடாக மாறும். ” எனவும் ஐதேக செயலாளர் கூறினார்.
