2025ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு அரசு உழைக்கிறது: இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
இந்திய மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் கடந்த மாதம் தமிழகத்தின் தூத்துக்குடியில் பல்வேறு திட்டங்களை வெளியிட்டார். 2025 ஆம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உதவும் முகமாக தளவாடச் செலவுகளைக் குறைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் 231.21 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிமுகப்படுத்தினர், இதில் ஸ்மார்ட் போர்ட் திட்டங்கள் உட்பட, இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டரூ. 2.29 கோடி பெறுமதியான கப்பல் போக்குவரத்து அமைப்பும் உள்ளடங்கும்.
“உள்நாட்டு அமைப்பின் வளர்ச்சியானது தனியுரிம மற்றும் விலையுயர்ந்த வெளிநாட்டு தயாரிப்பு மென்பொருள் தீர்வுகளை நம்பியிருப்பதன் தேவையை நீக்கும்” என்று அவர் கூறினார்.
அவர் Optic Fibre இணைப்பைத் திறந்து வைத்ததோடு, 1300 ஏக்கர் பரப்பளவில் துறைமுகம் சார்ந்த தொழில்களின் வளர்ச்சிக்காக தூத்துக்குடி SPEEDZ (கடலோர வேலைவாய்ப்பு பிரிவு) நிலத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
100 சதவீதம் எல்இடி விளக்குகளாக மாற்றுதல், இ-கார்கள், 140 கிலோவாட் சோலார் ரூஃப் டாப் சோலார் பவர் பிளாண்ட் போன்ற பசுமை திட்டங்களை அமைச்சர் திறந்து வைத்தார்.
நலத்துறையில், மருத்துவ ஆக்சிஜன் ஜெனரேட்டர் ஆலையை அமைச்சர் திறந்து வைத்ததோடு, ஒருங்கிணைந்த மருத்துவம் மற்றும் ஆயுஷ் பிரிவு மற்றும் V. O. சிதம்பரனார் கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியகத்திற்கான அடிக்கல் நாட்டினார்.
கூட்டத்தில் உரையாற்றிய சோனோவால், 2025 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்தியா தனது நன்கு வரையறுக்கப்பட்ட இலக்கை அடைய உதவும் தளவாடச் செலவுகளைக் குறைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாகக் கூறினார்.
