உள்ளாட்சிசபைத் தேர்தல் 2025 ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது. தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது.
2023 மார்ச் 9 ஆம் திகதியே உள்ளாட்சிசபைத் தேர்தல் நடைபெறவிருந்தது. எனினும், நிதி பிரச்சினையால் தேர்தல் பிற்போடப்பட்டது.
இதற்கு எதிராக பல தரப்புகளும் உயர்நீதிமன்றத்தை நாடின. இந்நிலையில் தேர்தல் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கமையவே உள்ளாட்சிசபைத் தேர்தல் ஜனவரி முற்பகுதியில் நடத்தப்படவுள்ளது என தெரியவருகின்றது.
அதேவேளை 2025 இறுதிக்குள் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிலவேளை புதிய பாராளுமன்றத்தில், புதிதாக வேட்பு மனுக்களை ஏற்கும் வகையில் சட்டமாற்றம் செய்யப்பட்டால் தேர்தல் திகதியில் மாற்றம் வரலாம்.










