2025 முற்பகுதியில் உள்ளாட்சி தேர்தல்!

2025 ஆரம்பத்தில் உள்ளாட்சபைத் தேர்தல் நடத்தப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்றது.இதன்போதே அமைச்சர் மேற்படி தகவலை வெளியிட்டார்.

“ உயர்நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும். அதற்கு நிதி ஒதுக்க வேண்டியுள்ளது. எனினும், மக்களின் வாக்குரிமையை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம்.” – எனவும் அமைச்சர் கூறினார்.

 

Related Articles

Latest Articles