எமது அரசு அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றது என்று தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
மனிதவலு மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களமும் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகமும் இணைந்து நடத்தும் விசேட தொழிற்சந்தை நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தொழிற்துறை பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க, ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“எமது அரசு ஆட்சிக்கு வந்த பின்னர் மூன்று தேர்தல்களை நடத்தியுள்ளது. தற்போது நாட்டில் அபிவிருத்திகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அவற்றுக்குத் தடை வராமல் அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு முயற்சி செய்கின்றோம்.” – என்றார்.
