21 ஆல் நிதி அமைச்சை இழக்கிறார் ஜனாதிபதி! பதவியேற்கிறார் அலிசப்ரி?

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, புதிய நிதி அமைச்சராக நியமிக்கப்படவுள்ளார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தச்சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சுதவிர ஏனைய அமைச்சுகளை ஜனாதிபதி வகிக்க முடியாது. அமைச்சு பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டால் 14 நாட்களுக்குள் புதிய நியமனத்தை வழங்கிவிட வேண்டும்.

இதற்கமையவே தனது கட்டுப்பாட்டின் கீழிருந்த நிதி அமைச்சை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அலி சப்ரிக்கு வழங்க விருப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

Related Articles

Latest Articles