ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் 21 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்துக்கான தேர்தல் பிரச்சார பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த தகவலை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான மருதபாண்டி ராமேஷ்வரன் உறுதிப்படுத்தினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த 13 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்துக்கான பயணத்தை மேற்கொள்ளவிருந்தார்.
எனினும், பிரச்சாரங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் பயணமும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையிலேயே அவர் 21 ஆம் திகதி வருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் நான்கு தேர்தல் தொகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான கூட்டங்களில் ஜனாதிபதி கலந்துகொள்வார்.
தகவல் : நீலமேகம் பிரசாந்த்