நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழும் டிக்கோயா, டங்கள் தோட்ட மேற்பிரிவுக்கு செல்லும் பிரதான வீதி பல தசாப்தங்களாக செப்பனிடபடாமையால் அத் தோட்டத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.
” 1990 காலப்பகுதியில் இங்கு தரம் ஒன்று முதல் ஜந்து வரை பாடசாலை இயங்கிவந்தது , அதன் பின்னர் அப் பாடசாலை கீழ் பிரிவிற்கு கொண்டு செல்லபட்டது. இதனால் மாணவர்கள் அந்த பாடசாலைக்கே செல்கின்றனர்.
சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. ஏனெனில் வாகனங்கள் பயணிக்க முடியாத வகையில் வீதி குன்றும், குழியுமாக உள்ளது.” – எனவும் மக்கள் தெரிவித்தனர்.
110 குடும்பங்களைச் சேர்ந்த 44 இற்கு மேற்பட்டவர்கள் அத்தோட்டத்தில் வாழ்கின்றனர்.
தமது ஊருக்கு செல்லும் வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்