நாட்டில் 66 ஆயிரம் குடும்பங்களுக்கான உணவு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், மாதாந்தம் 15,000 ரூபா அடிப்படையில் 6 மாதங்களுக்கு குறித்த நிவாரணம் வழங்கப்படும் என உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கை உறுதி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தின் பிரதம அதிகாரி, ஜனாதிபதி ஆலோசகர், கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்தார்.
இதனிடையே, இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் 21,000 சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இந்த எண்ணிக்கை 40,000 வரை அதிகரிக்கலாம் எனவும் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று(29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
