’21’ குறித்து நீதி அமைச்சர் யாழில் வெளியிட்ட தகவல்!

21 ஆவது திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் நாட்டிலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன, மத, மொழி வேறுபாடின்றி சமமான பலனை அனுபவிக்க முடியுமென்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம், நட்டஈடு வழங்கல் மற்றும் நல்லிணக்க அலுவலகங்கள் ஊடாக சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொழும்பு – யாழ். கடுகதி ரயிலில் நேற்று யாழ்ப்பாணம் சென்ற அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, யாழ்ப்பாண ரயில் நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

Related Articles

Latest Articles