21/4 தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிகள் இருவரின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம், பிணையில் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்றத்தால், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று கொழும்பில் உள்ள முக்கிய இரு நட்சத்திர ஹோட்டல்கள்மீது நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல்களில், மொஹமட் இல்ஹாம் மற்றும் மொஹமட் இன்ஷாப் ஆகிய சகோதரர்களே பிரதான சூத்திரதாரிகளாக செயற்பட்டனர்.
அதன்பின்னர் தெமட்டகொடையில் உள்ள இவர்களின் வீட்டிலும் தற்கொலை குண்டு வெடிக்கவைக்கப்பட்டது.
இதனையடுத்து இவர்களின் தந்தையான மொஹம்மட் இப்ராஹீம் கைது செய்யப்பட்டார்.










