” 21/4 தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் உரிய தண்டனை வழங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு நீதியை பெற்றுக்கொடுக்காவிட்டால் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். ” – என்று இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” 21/4 பயங்கரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் தனது பதவிகாலம் முடிவடைவதற்குள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உரிய தண்டனையை பெற்றுக்கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இந்த பொறுப்பில் இருந்து ஜனாதிபதி விலகமாட்டார் என்பதும் எனக்கு தெரியும்.
சிலவேளை, உரிய நடவடிக்கை எடுக்கமுடியாமல்போனால் அடுத்த தேர்தலில் நான் போட்டியிடமாட்டேன். இதனை பொறுப்புடனேயே கூறுகின்றேன். அவ்வாறு கூறுவதற்கான முதுகெலும்பு எனக்கு உள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழுக்கள் மூடிமறைக்கப்பட்டன. ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை ஜனாதிபதி வெளிப்படுத்தினார். எனவே, அவர்மீது முழு நம்பிக்கையும் உள்ளது. ” – என்றார்.