21/4 தாக்குதல் – கைதான சந்தேகநபர் உயிரிழப்பு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கல்முனையைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் 23ஆம் திகதி சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக குறித்த சந்தேகநபர் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி முதல் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

Related Articles

Latest Articles