” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். மக்களால் எற்றுக்கொள்ளக்கூடியவர்களை விசாரணைக்குழுவில் இடம்பெறச்செய்யவும்.”
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் நேற்று கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் எந்தவொரு தகவலையும் மறைக்க வேண்டும். எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தவும். புதியதொரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். ஏற்றுக்கொள்ளக்கூடியவர்கள் அந்த விசாரணைக்குழுவில் இடம்பெறவேண்டும். கத்தோலிக்க சமூகத்தின் பிரதிநிதித்துவமும் அவசியம். கத்தோலிக்க சபையையும் இணைத்துக்கொள்ளல் அவசியம்.
ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் இத்தாக்குதலுடன் தொடர்புடைய எவரும் தப்பமுடியாது. எவரையும் பாதுகாக்க முற்படவும் மாட்டோம். வெளிப்படைத்தன்மையான விசாரணைப் பொறிமுறை வகுக்கப்படும்.” – என்றார்.
