’21’ ஐ ஆதரிக்கமாட்டேன் – நாடாளுமன்றில் இன்று அறிவித்தார் வீரசேகர!

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டம் அமுலில் இருக்கும்வரை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களை மட்டுப்படுத்தக்கூடாது – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அத்துடன், 19 ஐ அடியொட்டியதாக முன்வைக்கப்படும் 21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை தான் ஆதரிக்க போவதில்லை எனவும் அவர் அறிவித்தார்.

” புதிய அரசியலமைப்பை நடைமுறைப்படுத்தவே ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கினர். இது தொடர்பில் நிபுணர்கள் குழுவின் அறிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 21 தேவையற்றதொன்றாகும்.” – என்று நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர சுட்டிக்காட்டினார்.

” இலங்கையில் 52 வீதமான தமிழ் மக்கள், சிங்களவர்கள் மத்தியில்தான் வாழ்கின்றனர். எனவே, சிங்கள மக்களுக்கும் தாம் விரும்பிய இடத்தில் வாழும் உரிமை உள்ளது. எனினும், முடியாது எனக்கூறி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனவாதம் பரப்புகின்றனர். இதனை அனுமதிக்க முடியாது.” – எனவும் அவர் இடித்துரைத்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles