‘21,600 லீற்றர் பெற்றோல் – 33,400 லீற்றர் டீசல்’ பதுக்கல்! 675 பேர் கைது!

எரிபொருளை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 675 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருளை பதுக்கி வைத்துள்ளவர்களை கைது செய்ய, நாடு தழுவிய ரீதியில் இதுவரை 670 சுற்றி வளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதன்போது 21 ஆயிரத்து 600 லீற்றர் பெற்றோலும், 33 ஆயிரத்து 400 லீற்றர் டீசலும், 11 ஆயிரத்து 100 லீற்றர் மண்ணெண்ணெய்யும் மீட்கப்பட்டுள்ளன.

கைதானவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles