சர்வக்கட்சி அரசு எனக் கூறப்படும் ஆட்சியில், நிதி அமைச்சு பதவியும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதன்படி புதிய நிதி அமைச்சராக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் இன்று (25) பதவிப்பிரமாணம் செய்கின்றார்.
1977 இல் நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு, 77 இலேயே பிரதி அமைச்சு பதவியும், அதன்பின்னர் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவியும் வழங்கப்பட்டது.
அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியில் கல்வி உட்பட முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். பொருளாதார விவகார அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார். 6 தடவைகள் பிரதமராகவும் பதவியேற்றுள்ளார்.
எனினும், தனது நாடாளுமன்ற அரசியல் வாழ்வில் ரணில் விக்கிரமசிங்க இன்னமும் நிதி அமைச்சு பதவியை வகித்ததில்லை. வரவு – செலவுத் திட்டத்தையும் முன்வைத்து உரையாற்றியதில்லை. இம்முறையே அதற்கான வாய்ப்பும் கிட்டவுள்ளது.
ஆர்.சனத்