இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த இரா. சம்பந்தனுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீது நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24 ஆம் திகதி விவாதம் நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம் எதிர்வரும் 21 முதல் 24 ஆம் திகதிவரை கூடவுள்ளது.
இதன்போது ஜனவரி 24 வெள்ளிக்கிழமை, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக முழு நாளும் ஒதுக்கப்படவுள்ளது.
அதற்கமைய, மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆர். சம்பந்தன், ருக்மன் சேனாநாயக்க, ரொஜினோல்ட் பெரேரா, சிறினால் த மெல் மற்றும் மொஹமட் இல்யாஸ் ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைக்காக அன்றைய தினம் மு.ப. 9.30 முதல் பி.ப. 5.30 வரை ஒதுக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர தெரிவித்தார்.










