2024 ஜனவரி 1 முதல் ஜனவரி 25 வரையான காலப்பகுதிக்குள் நாட்டில் ஆயிரத்து 189 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்துகளில் 136 பேர் பலியாகியுள்ளனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
அதேவேளை கடந்த ஆண்டு 22 ஆயிரத்து 804 வாகன விபத்துகள் இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் 2 ஆயிரத்து 280 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
