26 நாட்களில் 6,896 பேருக்கு டெங்கு!

நாட்டில் கடந்துள்ள 26 நாட்களில் மாத்திரம் 6 ஆயிரத்து 896 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் – என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் சமூக வைத்திய நிபுணர் ஷிலந்தி செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, மாத்தறை, மன்னார், மட்டக்களப்பு, காலி, திருகோணமலை, யாழ்ப்பாணம், பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலே டெங்கு நோய் வேகமாக பரவிவருகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, டெங்கு நோய் பரவாத விதத்தில் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார தரப்பினர், பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எவருக்காவது நோய் அறிகுறிகள் தென்படும்பட்சத்தில் உடன் வைத்திய ஆலோசனையை பெறுமாறு கோரப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles