26 வருடங்களுக்கு பிறகு தலைமை பதவியிலிருந்து விலகுகிறார் ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து விலகுவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார் என்று அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வஜீர அபேவர்தன  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எதெல்லாம் நடக்ககூடாது என எதிர்ப்பார்க்கப்பட்டதோ அவையெல்லாம் நடந்தமுடிந்துவிட்டன. இனியும் எமது கட்சிக்கு எதிராக நடப்பதற்கு ஒன்றும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர். ஆனால், சிங்கள, பௌத்த மக்கள் உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை. கட்சி பிளவுபட்ட அதிருப்தியாலேயே ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்கள் எமக்கு வாக்களிக்கவில்லை. அதற்கேற்றவகையிலேயே எமக்கு எதிராண அணியும் பிரச்சாரம் முன்னெடுத்தது.

நாம் அதிகாரத்துக்கு ஆசைப்பட்டு தவறான பக்கம் நிற்கவில்லை. நீதியின் பக்கம் நின்றோம். அதனால் தோல்வி குறித்து கவலை இல்லை.
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால், தோல்வியடைந்தவருக்கு அதற்கான வாய்ப்பு வழங்கப்படக்கூடாது என்பதே எனது கருத்து.

அதேவேளை, கட்சி தலைமைத்துவத்தில் மாற்றம் செய்வது தொடர்பில் தற்போதைய தலைவர் பரீசிலித்துவருகின்றார். விடைபெறுவதற்கு தயார் என்ற அறிவிப்பை கடந்த வெள்ளிக்கிழமை அவர் விடுத்திருந்தார். எனவே, மாற்றம் தொடர்பில் அனைவரும் ஒன்றுகூடி முடிவொன்றை எடுக்கவேண்டும்.

கட்சியை வழிநடத்தும் தகைமை எனக்கு இருக்கின்றது. எனவே, தலைமைப்பதவியை வழங்கினால் முன்நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles