டிசம்பர் மாதத்தின் முதல் 26 நாட்களில் மாத்திரம் 69,941 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் ஒரு மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இதுவாகும் .
டிசம்பரில் வந்த சுற்றுலாபயணிகளில் 19,574 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்ததோடு ரஷ்யாவில் இருந்து 7,951 சுற்றுலாப் பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 6,819 சுற்றுலாப் பயணிகளும் இந்த மாதம் இலங்கை வந்துள்ளனர்.
மேலும் 4,131 சுற்றுலா பயணிகள் ஜெர்மனியிலிருந்து வந்துள்ளனர். டிசம்பர் மாதம் முதல் 26 நாட்களில் அவுஸ்திரேலியாவிலிருந்து 2,620 சுற்றுலாப் பயணிகளும், அமெரிக்காவிலிருந்து 2,462, பிரான்சிலிருந்து 2,313, மாலைதீவிலிருந்து 2,283 மற்றும் உக்ரைனில் இருந்து 2,054 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களுடன் ஒப்பிடும் போது இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை செப்டெம்பர் முதல் டிசம்பர் 26 வரை அதிகரித்துள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதன்படி, செப்டம்பர் மாதத்தில் 13,547 சுற்றுலாப் பயணிகளும், அக்டோபரில் 22,771 சுற்றுலாப் பயணிகளும், நவம்பரில் 44,294 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.










