அரசாங்கம் தீர்மானத்தின்படி 27 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை இன்று முதல் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் நாட்டு மக்களின் நலன் கருதி சுப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பாரிய அத்தியாவசியப் பொருள் விற்பனை நிலையங்கள் இந்த விலைக் குறைப்பை பின்பற்ற முடியும் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன, மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் வகையில் மேற்படி விற்பனை நிறுவனங்கள் மக்களுக்கு சலுகை வழங்குமானால் அதனை வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளார்.
27 பொருட்கள் மூன்று மாதங்களுக்கு விலைக் குறைப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதுள்ள நிலையில் அவற்றை சதொச, கூட்டுறவு விற்பனை நிலையம் மற்றும் கியூசொப் ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;
கீரி சம்பா 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா,
கோதுமை மா 1kg : புதிய விலை 84 ரூபா – தற்போதைய விலை 105 ரூபா,வௌ்ளை சீனி 1kg : புதிய விலை 99 ரூபா – தற்போதைய விலை 110 ரூபா ,
சிகப்பு சீனி 1kg : புதிய விலை 125 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா ,
தேயிலை 100g : புதிய விலை 95 ரூபா – தற்போதைய விலை 130 ரூபா ,
பருப்பு அவுஸ்திரேலியா 1kg : புதிய விலை 165 ரூபா – தற்போதைய விலை
188 ரூபா, பெரிய வெங்காயம் இந்தியா 1kg : புதிய விலை 120 ரூபா – தற்போதைய விலை 140 ரூபா,
உருளைக்கிழங்கு உள்நாடு 1kg : புதிய விலை 180 ரூபா – தற்போதைய விலை (216 – 220) ரூபா,
உருளைக்கிழங்கு பாகிஸ்தான் 1kg : புதிய விலை 140 ரூபா தற்போதைய விலை 190 ரூபா,
கடலை 1kg : புதிய விலை 175 ரூபா – தற்போதைய விலை 225 ரூபா,
காய்ந்த மிளகாய் 1kg : புதிய விலை 495 ரூபா – தற்போதைய விலை 550 ரூபா,
ரின் மீன் உள்நாடு 425g : புதிய விலை 220 ரூபா – தற்போதைய விலை 240 ரூபா,
ரின் மீன் இறக்குமதி 425g : புதிய விலை 265 ரூபா – தற்போதைய விலை 280 ரூபா,
நெத்தலி தாய்லாந்து 1kg : புதிய விலை 545 ரூபா – தற்போதைய விலை 700 ரூபா,
தோலுடன் கூடிய கோழி 1kg : புதிய விலை 400 ரூபா – தற்போதைய விலை 430 ரூபா,
கட்டி உப்பு 1kg : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 55 ரூபா, பால்மா 400g : புதிய விலை 355 ரூபா – தற்போதைய விலை 380 ரூபா,
சோயா எண்ணை 500ml : புதிய விலை 310 ரூபா – தற்போதைய விலை 470 ரூபா, சவர்க்காரம் (BCC) 115g : புதிய விலை 43 ரூபா – தற்போதைய விலை 53 ரூபா,
சவர்க்காரம் 650g : புதிய விலை 260 ரூபா – தற்போதைய விலை 325 ரூபா, வாசனை சவர்க்காரம் 100g : புதிய விலை 56 ரூபா – தற்போதைய விலை 63 ரூபா,
கை சுத்தீகரிப்பு (Hand sanitizer) 100ml : புதிய விலை 250 ரூபா – தற்போதைய விலை 350 ரூபா, முகக்கவசம் (SLS தரச் சான்றிதழுடன் கூடிய) : புதிய விலை 14 ரூபா – தற்போதைய விலை 25 ரூபா எனவும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.










