இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும், அதன்பின்னர் ஜுலை முதல் வாரத்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார் எனவும் அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதை இதன்போது நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் ஜனாதிபதி, எதிரணி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளார் என தெரியவருகின்றது.
இந்த அழைப்பின் பின்னரே எதிரணி உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதிக்கு தமது ஆதரவை தெரிவித்து , அவருடன் சங்கமிப்பார்கள் எனவும் அறியமுடிகின்றது.
பாரிஸ் கிளப், சீனா உள்ளிட்ட தரப்புகளுடன் இறுதிகட்ட ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுவிட்டது என்ற அறிவிப்பு ஜுன் 26 ஆம் திகதி வெளியாகும் எனவும், அதனை பெரும் வெற்றியாக கருதி நாடு முழுவதும் நிகழ்வுகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.