278 பேருக்கு நாளை பொதுமன்னிப்பு: ஞானசார தேரரும் விடுதலை?

வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு விசேட பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

இவர்களில் 10 பெண் கைதிகளும் அடங்குகின்றனர்.
ஜனாதிபதியினால் இந்த விசேட பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படும் 278 கைதிகளில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இல்லை என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, பொது மன்னிப்பு வழங்குமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில், 2016ம் ஆண்டு நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு, நான்கு வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, கலகொடஅத்தே ஞானசார தேரரை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

Related Articles

Latest Articles