2Mt 2ஆவது இடத்துக்கு முன்னேறினார் வனிந்து ஹசரங்க!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதல் இரு ரி20 சர்வதேச போட்டிகளிலும் சோபித்த இலங்கை அணித் தலைவர் வனிந்து ஹசரங்க ஐ.சி.சி. ரி20 தரவரிசையில் பந்துவீச்சாளர் மற்றும் சகலதுறை வீரர்களுக்கான பட்டியலில் இரண்டாது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஹசரங்க ஆப்கானுக்கு எதிரான முதல் இரு ரி20 போட்டிகளிலும் மொத்தம் 89 ஓட்டங்களை பெற்றதோடு அவரது ஓட்ட வேகம் 217.07 ஆக பதிவானது. பந்துவீச்சிலும் சோபித்த அவர் இரண்டு போட்டிகளிலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதில் வனிந்து தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த சக வீரர் மஹீஷ் தீக்ஷனவை மூன்றாவது இடத்திற்கு பின்தள்ளியே ஒரு இடம் முன்னேறி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். ரி20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷீத் முதலிடத்தில் உள்ளார்.

இதேவேளை ரி20 சகல துறை வீரர்களுக்கான தரவரிசையில் வனிந்து ஹசரங்க அதிரடியாக ஏழு இடங்கள் முன்னேற்றம் கண்டே இரண்டாவது இடத்தை பிடித்தார்.இந்தத் தரவரிசையில் பங்களாதேஷின் ஷகீப் அல் ஹசன் முதலிடத்தில் உள்ளார்.

இந்நிலையில் ஆண்களுக்கான ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிசங்க 18 ஆவது இடத்தில் இருந்து 11 ஆவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். பத்தும் நிசங்க ஆப்கானுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கையின் முதல் வீரராக இரட்டைச் சதம் பெற்றதோடு மூன்றாவது போட்டியில் 118 ஓட்டங்களை பெற்றார்.

ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் பாகிஸ்தானின் பாபர் அஸாம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிப்பதோடு இதன் முதல் பத்து இடங்களிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles