3 வருடங்களுக்குள் 1,073 சட்டவிரோத துப்பாக்கிகள் STF ஆல் கைப்பற்றல்!

இலங்கையில் கடந்த 3 வருடங்களில் விசேட அதிரடிப்படையினரால் ஆயிரத்து 73 சட்டவிராேத துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்.பி. சஞ்சீவ எதிரிமான்னவால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

” போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் நாட்டுக்கு துப்பாக்கிகளை கொண்டுவருகின்றனர். உதாரணமாக பண்டாரகம பொலிஸ் பிரிவில் கைப்பற்றப்பட்ட ஹெராேயின் போதைப்பொருடன் 10 பிஸ்டோல்களும் கைகப்பற்றப்பட்டிருந்தன. இவ்வாறு தேடுதல், சுற்றிவளைப்புகளின் மூலமே இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க முடியும்.” – எனவும் அமைச்சர் கூறினார்.

Related Articles

Latest Articles