மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்டவர்களே பூரணமாக தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்டவர்களாக அடையாளப்படுத்தப்படுவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் தற்போது மூன்றாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுவருகின்றது. இந்நிலையில் மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்ற விமர்சனமும் உள்ளது.
