3 முக்கிய ஆஸ்கார் விருதுகளை வென்ற படம்…….

93 வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகை என மூன்று முக்கிய விருதுகளை நோமட்லேண்ட் படம் பெற்றுள்ளது.

உலகளவில் திரைப்படத் துறையில் மிக உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் எனும் அகாடமி விருது. இவ்விருது விழா, வழக்கமாக பிப்ரவரி மாதம் நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, 93 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா 2 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டது.

93வது ஆஸ்கர் விருது விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள யூனியன் ஸ்டேஷன் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்தது. இதில் கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் விருது வழங்கப்பட்டது.

ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – நோ மேட்லாண்ட்

க்ளோயி சாவ் என்கிற சீனப் பெண் இயக்கிய ‘நோ மேட்லாண்ட்’ திரைப்படம் மூன்று ஆஸ்கர் விருதுகளை வென்றது. சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது ‘நோ மேட்லாண்ட்’ படத்திற்கு கிடைத்தது. மேலும் இப்படத்தின் நாயகி பிரான்சஸ் மெக்டார்மண்டுக்கு சிறந்த நடிகைக்கான விருதும், இப்படத்தை இயக்கிய க்ளோயி சாவ்விற்கு சிறந்த இயக்குனருக்கான விருதும் கிடைத்தது.

ஆஸ்கர் வரலாற்றில் சிறந்த பெண் இயக்குனருக்கான ஆஸ்கர் விருதை பெறும் இரண்டாவது பெண் க்ளோயி சாவ் ஆவார். இதற்குமுன் கடந்த 2010ம் ஆண்டு கேத்ரின் பிக்லோ என்பவர் ‛தி ஹர்ட் லாக்கர்’ என்ற படத்திற்காக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர் – ஆண்டனி ஹாப்கின்ஸ் (தி பாதர்)

சிறந்த நடிகை – பிரான்சஸ் மெக்டார்மண்ட் (நோ மேட்லாண்ட்)

சிறந்த ஆவணப்படம் – மை ஆக்டோபஸ் டீச்சர்

சிறந்த வெளிநாட்டு படம் – அனதர் ரவுண்ட் (டென்மார்க்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – சோல்

சிறந்த அனிமேஷன் குறும்படம் – இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ

சிறந்த ஆவண குறும்படம் – கோலெட்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – ட்ரூ டிஸ்டேன்ட் ஸ்ட்ரேஞ்சர்

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே, ஸ்காட் பிஸ்சர் (டெனெட்)

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸுக்கான விருது கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான டெனெட் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த விருதை ஆண்ட்ரு ஜாக்சன், டேவிட் லீ, ஆண்ட்ரூ லாக்லே மற்றும் ஸ்காட் பிஸ்சர் ஆகிய நால்வரும் பெற்றுக்கொண்டனர்.

சிறந்த ஒளிப்பதிவாளர் – எரிக் மெசர்ச்மிட் (மங்க்)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் நெல்சன் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

சிறந்த திரைக்கதை – எமரால்டு பென்னல் (பிராமிசிங் யங் வுமன்)

தழுவல் திரைக்கதை – கிறிஸ்டோபர் புளோரியன் (தி பாதர்)

சிறந்த பின்னணி இசை – ட்ரெண்ட் ரென்சர், அட்டிகஸ் ராஸ், ஜான் படிஸ்டி (சோல்)

சிறந்த பாடல் – பைட் ஃபார் யூ

சிறந்த துணை நடிகர் – டேனியல் கல்லூயா (ஜூடாஸ் அண்ட் தி பிளாக் மெசியா)

சிறந்த துணை நடிகை – யூ ஜங் யூன் (மினாரி)

சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரம் – லோபஸ் ரிவேரா, மியா நில், ஜமிகா வில்சன் (பிளாக் பாட்டம்)

ஆடை வடிவமைப்பு – அன் ரோத் (பிளாக் பாட்டம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு – டொனால்டு கிரஹாம் பர்ட், ஜன் பாஸ்கல் (மங்க்)

சிறந்த ஒலி அமைப்பு – நிகோலஸ் பெகர், ஜேமி பக்‌ஷித், மிட்சல் கவுட்டோலென், கார்லஸ் கார்டெஸ், பிலிப் பிலாத் (சவுண்ட் ஆஃப் மெட்டல்)

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles