நமுனுகுலை – பசறை வீதியில் கெப் ரக வாகனமொன்று 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

பசறை – நமுனுகுலை பிரதான வீதியில் பசறை கோணக்கலை கஹவத்தைப் பகுதியில் இருந்து, பதுளை நோக்கி சென்று கொண்டிருந்த கெப் ரக வாகனமொன்றே கோணக்கலை புஹுல்வத்தை பாடசாலைக்கு அருகாமையில் இருந்த பாலத்தில் இருந்து சுமார் 30 அடி பள்ளத்தில் விழுந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.

வாகன சாரதி அயலவர்களின் உதவியுடன் மீட்க்கப்பட்டு, பசறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பில் பசறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
