30 ஆம் திகதிக்கு பிறகும் நாட்டை முடக்ககூடாது – சுகாதார அமைச்சர் கருத்து

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கக்கூடாது என்பதே தனது விருப்பம் என சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பல தரப்பினரின் கோரிக்கைகளுக்கு அமைவாகவே இம்முறை நாடு முடக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

உலகின் முன்னணி நாடுகள் பலவும் நாட்டை முடக்கிவிட்டு முன்னேறிச் செல்வது கடினமென்றும் சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை முடக்கிவிட்டு கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை உலக நாடுகள் அனைத்தும் தற்போது ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Articles