300 லீற்றர் எரிபொருளுடன் இருவர் கைது

திருகோணமலை – கிண்ணியாவில் ஓட்டோ ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகை எரிபொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 200 லீற்றர் டீசலும், 100 லீற்றர் பெற்றோலும் சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைதுசெய்யப்பட்டவர்கள் கிண்ணியா சூரங்கள் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுடைய இளைஞர்களாவர்.

அவர்களை விசாரணைகளின் பின்னர் நாளை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கிண்ணியாப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles