31 மாணவர்கள் 9A சித்தி! 175 பேர் உயர்தரம் கற்க தகுதி!! ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சாதனை!!!

2022 (2023) சாதாரணதரப்பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.

பரீட்சைக்கு தோற்றிய 180 மாணவர்களில் 175 பேர் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.

31 மாணவர்கள் 9A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
( தமிழ்மொழிமூலம் 25 மாணவர்கள், ஆங்கில மொழிமூலம் 6 மாணவர்கள்)

27 மாணவர்கள் 8A பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். ( தமிழ்மொழிமூலம் 21 மாணவர்கள், ஆங்கில மொழிமூலம் 6 மாணவர்கள்)

18 மாணவர்கள் 7A பெறுபேறுகளையும், 18 மாணவர்கள் 6A பெறுபேறுகளையும், 14 மாணவர்கள் 5A பெறுபேறுகளையும் பெற்றுள்ளனர்.

கல்லூரி அதிபர் எஸ். ராஜன், பிரதி அதிபர் ஜி. ஆனந்தராஜா, வகுப்பாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர் குழாமுக்கு பழைய மாணவர்களும், பெற்றோர்களும் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles