329 கைதிகளுக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் சில சிறைக்கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பழைய போகம்பறை சிறைச்சாலை கைதிகள் 80 பேருக்கும், குருவிட்ட சிறைச்சாலை கைதிகள் 4 பேருக்கும், பூஸா சிறைச்சாலையில் 44 பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.

அத்துடன் வெலிக்கடை சிறைச்சாலையிலும் தொற்றாளர்கள் அண்மைய நாட்களில் அடையாளம் காணப்பட்டனர். இதன்படி இன்று மதியம்வரை 329 கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles