33, 000 லீற்றர் டீசலுடன் எரிபொருள் பௌசர் ஹப்புத்தளையில் விபத்து – டீசலை சேகரிப்பதில் மக்கள் முண்டியடிப்பு

திருகோணமலை ஐஓசி எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து,  ஹப்புத்தளை நகரிலுள்ள ஐஓசி களஞ்சியசாலைக்கு 33,000 லீற்றர் டீசலை ஏற்றிச் சென்று கொண்டிருந்த கொள்கலன் ஒன்று, ஹப்புத்தளை நகர் பகுதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

எரிபொருள் கொள்கலனின் இருந்து டீசல் வெளியேறுவதாகவும், அதனை மக்கள் சேகரித்துவருகின்றனர் எனவும் பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

ராமு  தனராஜா

Related Articles

Latest Articles