33 ஆயிரம் லீட்டர் டீசலுடன் விபத்துக்குள்ளானது கனரக வாகனம் – இருவர் படுகாயம்!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் டீசல் கொள்கலனொன்று இன்று (13.12.2021) மாலை 5.00 மணியளவில் விபத்துக்குள்ளானதில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.

கொழும்பு முத்துராஜவெல பகுதியிலிருந்து கொட்டகலையிலுள்ள பெற்றோலிய களஞ்சியசாலைக்கு டீசலை கொண்டு செல்லும் போதே , கட்டுப்பாட்டை இழந்த குறித்த பவுஸர் இவ்வாறு விபத்துக்குள்ளானது.

பவுஸரில் இருந்த டீசல் வெளியேறி வீதியில் பரவியுள்ளது. இவ் விபத்தினால் சில மணி நேரம் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

இவ்விபத்தில் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்த நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பவுஸரில் 33,000 லீட்டர் டீசல் இருந்ததாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles