35 வருட கல்வி சேவையில் இருந்து அதிபர் ஆறுமுகம் சுந்தர் ஓய்வு!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஹோல்புறூக் கோட்டம் 03 டொரிங்டன் ஆடலி கிளன்லைன் ஹோல்புறூக் விஞ்ஞான கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அதிபராகவும் ஆசிரியராகவும் 35 வருடங்கள் கடமையாற்றிய‌ ஆறுமுகம் சுந்தரம் தனது கல்வி பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இவருடைய சேவை காலத்தில் பாடசாலை அபிவிருத்தி , மாணவர்களின் கல்வி வளர்ச்சி, நேர்மையான நிர்வாகம் பெற்றோர்களுடன் நெருங்கிய தொடர்பு, கல்வி அதிகாரிகளுடன் சிநேகபூர்வமான உறவு, பிள்ளைகள் மத்தியில் சிறந்த அதிபர் என்ற அடையாளம் என்பவற்றுடன் உணர்வோடு செயல்பட்டவர்.

அதிபர் ஆறுமுகம் சுந்தரம் அவர்களிடம் கற்ற எத்தனையோ மாணவர்கள் தற்போது கல்விமான்களாகவும் புத்தி ஜீவிகளாகவும். இருப்பது எமது சமூகத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகும்.

அதிபர் அவர்களுக்கான பாராட்டு விழா நு கிளன்லைன் பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles