36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தியகமவில் ஆரம்பம்!

36 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இம்முறை ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ச சர்வதேச மைதானத்தில் வெகு விமரிசையாக ஆரம்பமானது.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம், இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் இலங்கை இளைஞர் கழக சம்மேளனம் ஆகிய இணைந்து 36 வது முறையாகவும் ஏற்பாடு செய்திருக்கும் இவ்விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சர் சுனில்குமார கமகே ஆகியோரின் தலைமையில் ஆரம்பமானது.

அதே வேளை இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுப்புன் விஜேரத்ன உள்ளிட்ட பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 26 நிர்வாக மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 2500 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளின் பங்குப்பற்றலுடன் இவ் ஆரம்பநிகழ்வு நடைபெற்றது.

Related Articles

Latest Articles